பாங்காக் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்; அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய்லாந்து தலைநகரின் கிழக்குப் பகுதியில் உள்ள Bangchak Corporation நிறுவனத்தின் ஆலையில் உள்ளூர் நேரப்படி சுமார் பிற்பகல் 2.45 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தீ பரவியது. தீ 30 நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது; விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நகரின் வானில் கரும்புகை சூழ்ந்ததால், அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தினர். பாங்காக் அதிகாரிகள் அனுப்pய கைப்பேசி எச்சரிக்கையில் தீ கட்டுப்பாட்டில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது; ஆனால் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என மக்கள் எச்சரிக்கப்பட்டனர். நகர அரசு நடத்தும் Erawan அவசர மருத்துவ மையம் நான்கு சிவப்பு பிரிவு நோயாளிகளுக்கும் மூன்று மஞ்சள் பிரிவு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதாகக் கூறியது.
ஆலையில் உற்பத்தியை நிறுத்தியதாக Bangchak Corporation தெரிவித்துள்ளது. இந்த ஆலை நாளொன்றுக்கு 120,000 பேரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. சொன்புரி மாகாணத்தில் நிறுவனத்துக்கு இரண்டாவது சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
மூலம்
BBC News
BBC News அறிக்கையின் அடிப்படையில் Colombo Today தயாரித்த சுருக்கம்.
- #thailand
- #bangkok
- #oil refinery
- #explosion
- #bangchak corporation